முஸ்லிம் பெண்ணை ஞானசார தேரர் இனவாத நோக்கத்திற்காக பயன்படுத்துகிறாரா? வெளியான உண்மை

Report Print Steephen Steephen in சமூகம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது முஸ்லிம் விரோத அரசியல் நோக்கத்திற்காக பண்டாரகமை, அட்டலுகமை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஹய்ஃபா என்ற பெண்ணை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகமை, அட்டலுகமை பிரதேசத்தை சேர்ந்த அப்துல் ஹசன் பாத்திமா ஹய்ஃபா என்ற பெண் அண்மையில், ஞானசார தேரருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

சிங்களவரை மணந்துக்கொண்டதால், முஸ்லிம் மக்கள் தனது கணவருக்கும் தனக்கும் தொந்தரவுகளை கொடுத்ததாகவும் கணவரை மதம் மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் ஹய்ஃபா இந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

அத்துடன் இது குறித்து பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு சம்பந்தமாகவும் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இனவாத பிரச்சினையில்லை என பிரதேச மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த முஸ்லிம் பெண், சிங்களவரை மணந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பின்னர், திடீரென இனவாத கதையை கூறியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கிராமத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பெண்ணின் நடத்தை சரியில்லை என்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. வேறு ஒரு ஆணுடன் இருந்த போது, பெண் பிடிப்பட்டுள்ளார்.

அப்போதே அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். பெண்ணின் நடத்தை பற்றி கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரியும். இந்த பெண்ணிடம் ஞானசார தேரர் எப்படி சிக்கினாரோ தெரியவில்லை.

அந்த பெண் கூறுவதை செய்தியில் பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் அட்டலுகமை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.