மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி சம்பந்தமான விசாரணைக்கு வேறு குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி என்பவருக்கு எதிராக நியாயமான விசாரணைகளை நடத்துவதற்காக தற்போது விசாரணை நடத்தி வரும் குழுவினரை நீக்கி விட்டு, வேறு விசாரணைக்குழுவை நியமிக்குமாறு கோரி, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிடம் இன்று மனு கையளிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன மற்றும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் ஆகியோர் இந்த மனுவை கையளித்துள்ளனர்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தல் இயங்குவதாக கூறப்படும் 13 வஹாபிச அமைப்புகள் சம்பந்தமாக முறைப்பாடு செய்வதற்காக சிங்களே அபி தேசிய அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

அதேவேளை பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் அகுலுகல்லே சிறி ஜினானந்த தேரர் இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் செய்திருந்த இரண்டு முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் பெற அவர் அழைக்கப்பட்டுள்ளார்.