தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட நல்லிணக்க அமைச்சே கூடுதலான அபிவிருத்தியை மேற்கொண்டிருக்கிறது

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

நாவிதன்வெளி 15ஆம் கிராமம் கண்ணகியம்மன் ஆலயத்தில் அமைச்சர் மனோகணேசனின், அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தா.ஜெயாகரனுடன் பிரதேச மக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட நல்லிணக்க அமைச்சே கூடுதலான அபிவிருத்தியை மேற்கொண்டிருக்கிறது என நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் யுத்தகாலங்களில் இராணுவத்தினராலும், ஊர்காவற்படையினராலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, பொருளாதார வளங்களும் சூறையாடப்பட்டது, அவற்றின் வடுக்களை இன்றுவரை சுமந்துகொண்டு இருக்கின்றது.

சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் எல்லையில் அமைந்திருந்த தமிழ் கிராமங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டன அக்கிராமங்களுக்கு அபிவிருத்தி வாழ்வாதார உதவிகள் தான் நிகழ்கால தேவையாக இருக்கின்றது.

கல்வியில் பிரதேச மாணவர்கள் அபார திறமையை வெளிக்காட்டுகின்ற போதிலும் எமது தமிழ் பாடசாலைக்கான வழங்கள் காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டு தான் வருகின்றன.

இவற்றுக்கான முன் நடவடிக்கையை விரைந்து பெற்றுத்தர துறைசார் அமைச்சர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மைதானங்கள், மயானங்கள், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறிப்பாக 2018ஆம் ஆண்டு 25 மில்லியன் ரூபா நிதியை தந்தமைக்காக மக்கள் சார்பாக மனோகணேசன் அமைச்சருக்கும், இணைப்பாளருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஆலத்தின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் இளைஞர்களும் கலந்துகொண்டு தங்களது சமூகத்தின் தேவைகளை இணைப்பாளர் மூலம் அமைச்சருக்கு கோரிக்கைகளை மனுக்கள் மூலம் கையழித்தனர்.

Latest Offers