வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு திடீர் இடமாற்றம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் திடீர் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இடமாற்றம் தொடர்பில் வடக்கு பிரதேச செயலாளருக்கு இன்றைய தினம் கடிதம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த க.பரந்தாமன் எதிர்வரும் திங்கள் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் தனது பிரிவில் உள்ள கிராம அலுவலர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேச செயலாளருக்கு கொழும்புக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.