திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் 08 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் தரம் 10யை சேர்ந்த மாணவர்கள் 08 பேக்கு திடீர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என்பன ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் 07 பெண்களும், ஒரு ஆணும் உள்ளடங்குவதாகவும், குறித்த மாணவர்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை எனவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த எட்டு மாணவர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பில் பாடசாலை கட்டட தொகுதிக்கு சென்ற பொகவந்தலாவ பிரசேத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கனேசன் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers