யாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்

Report Print Sindhu Madavy in சமூகம்

யாழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிதாக இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொண்ட போது குறித்த நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் கட்டளை நீர்முழ்கி அதிகாரி உட்பட நீர்முழ்கி பிரிவினரால் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போதே, குறித்த காங்கேசன்துறை கடலில் இருந்து இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறயை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் குறித்த பவளபாறைகள் கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டு மிகவும் அழகாகக் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசியப் பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் அவை இயற்கை காரணங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் மனித நடவடிக்கைகள் காரணமாக சிதைந்துவிடும்.

இதனை கருத்திற் கொண்டு இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை வடக்கு கடற்படையினர் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.