அவசரகால சட்டவிதிகளிற்கு எதிரான மனுவின் விசாரணை திகதி அறிவிப்பு

Report Print Kanmani in சமூகம்

அவசரகால சட்டத்தின் சில உட்பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 8ம் திகதி பரிசீலிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

புரவேசி பாலயா இயக்கத்தின் காமினி வியங்கொட மற்றும் மாற்று கொள்கை மையத்தின் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு முறைகளின் 19 மற்றும் 58 பிரிவுகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைப் பெறாமல் அவசரகாலச் சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் நபர்களை கைது செய்ய முடியும் என்றும், இந்த கைதுகளில் நீதித்துறையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் டப்புலோ டி லிவேரா மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேகொட ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.