எவன்கார்ட் விவகாரம்! இன்று இரவுக்குள் ஆறு பேர் கைது செய்யப்படகூடிய சாத்தியம்?

Report Print Murali Murali in சமூகம்

எவன்கார்ட் விவகாரத்தில் சந்தேகநபர்களாக உள்ள 6 பேர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சுமத்தப்பட்ட 8 பேரில் 2 பேர் நாட்டில் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எவன்காட் வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபரின் பணிப்புரைபடி செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.