இனவாத நோக்குடனான கருத்துக்களே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன - சபாநாயகர்

Report Print Kanmani in சமூகம்

வடக்கையும், தெற்கையும் பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரச கரும மொழிகள் வார இறுதிநாள் நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இனவாத நோக்குடனான கருத்துக்களே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன.

சிறந்த எதிர்காலத்திற்கு வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சகல அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

அரச கரும மொழிகள் அமைச்சினூடாக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் மனோகணேசனால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாகும்.

நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்த மொழி இன்றியமையாததாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers