போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தவர்கள் கைது

Report Print Sindhu Madavy in சமூகம்

மட்டக்களப்பு – புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரை தாக்கிவிட்டு, பொலிஸாரின் கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கி அபகரிப்பு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப் பகுதியை சுற்றிவளைத்து அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 21 பேரை கைதுசெய்துள்ளனர், சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிஸார் உட்பட விபத்தில் காயமடைந்த 4 பேர் மட்டு. போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இந்த பகுதியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் மற்றம் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.