பெல்ஜியம் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள்!

Report Print Sindhu Madavy in சமூகம்

பெல்ஜியம் நாட்டில் இருந்து கல்கிஸையைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பிய பொதியினுள் இருந்து அதிகளவிலான போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்குச் சென்ற நபரின் முகவரிக்கு வந்த பொதியை நேற்றைய தினம் சுங்க அதிகாரிகள் பிரித்து பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது ஒலி பெருக்கி சாதனப் பாகம் ஒன்றினுள் இருந்து 27.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெதபெடமின் என்னும் பெயருடைய 5500 போதை வில்லைகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கல்கிஸையைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

போதை மாத்திரை பொதியினை பெறுவதற்காக வருகை தந்த நபரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers