கொத்மலையில் தோட்ட முகாமையாளர் மீது தொழிலாளர்கள் தாக்குதல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மத்திய மாகாணம் - கொத்மலை, புளும் பீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது தோட்டத் தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புளும் பீல்ட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை அவர்களின் கணக்கில் வைப்பிலிடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று மதியம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்போது சொத்துகள் சிலவற்றிற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த 15 இலட்சம் ரூபாய் பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அப்பகுதியை சேர்ந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Latest Offers