புத்தர் சிலைகளை உடைப்பதற்காக வெளிநாட்டில் கொரில்லா தாக்குதல் பயிற்சி எடுத்த மத வெறியர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

பயங்கரவாதி சஹ்ரான் குழுவில் செயற்பட்ட ஒருவர் செச்சனியாவில் கொரில்லா பயிற்சி பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாவனெல்லயில் புத்தர் சிலையை உடைத்த சகோதரர்களில் ஒருவரே இவ்வாறு கொரில்லா பயிற்சி பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்துல் சாஹிட் என்பவர் துருக்கி நாட்டுக்கு சென்று அங்கிருந்து செச்சனியாவில் கொரில்லா தாக்குதல் பயிற்சி பெற்றுள்ளார்.

கொரில்லா பயிற்சிக்காக துருக்கி அனுப்பிய இஸ்லாமிய பயங்கரவாதி இராணுவத்தினரால் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ப்பட்ட தீவிர விசாரணையின் போது, இந்தத் தகவல் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாதி மற்றும் புத்தர் சிலையை உடைத்த சகோதரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு செயற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.