கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கான புதிய உறுப்பினர் ஒருவரை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி நியமித்துள்ளது.

குறித்த பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் சார்பில் தெரிவான உறுப்பினரான புவிதரன், சுயவிருப்பின் பேரில் பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கான புதிய உறுப்பினராக அம்பாள்குளத்தை சேர்ந்த ஓய்வு நிலை கிராம அலுவலர் கந்தையா தர்மலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகள் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த உறுப்பினருக்கு சபை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.