இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர்ந்து 868 நாட்களாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

21ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலை செய்து விட்டு களியாட்ட நிகழ்வா?, விழித்தெழு தமிழினமே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.