வவுனியா வீதிகளில் வீசப்பட்ட வாக்காளர் விண்ணப்ப படிவம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சூடுவெந்தபிலவு, பழைய பள்ளிவாசலுக்கு அருகே 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விண்ணப்ப படிவம் வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

வன்னித் தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்காக நிரப்பப்படும் விண்ணப்பப்படிவமே சேதமாக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் நேற்று இவ்வாறு வாக்காளர் விண்ணப்பப்படிவம் நிரப்பப்பட்ட நிலையில் சேதமாக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது.

இந் நிலையில் வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யுமாறு பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் நிலையில் விண்ணப்ப படிவம் நிரப்பப்பட்டு வீசப்பட்டிருப்பது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் காண்பிக்கப்பட்டபோது அது நிரப்பும் போது பிழையாக நிரப்பட்டவை என தெரிவித்திருந்தார்.