பௌத்த மதகுருவை இரு தடவை ஏமாற்றியுள்ள ஜனாதிபதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியை இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - தெவனிபியவர, ஸ்ரீ இந்ரா ராம விகாரையில் 25 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை திறந்து வைக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் வருகை தர இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வர முடியாமல் போனது.

இந்நிலையில், நாளை 7ஆம் திகதி குறித்த புத்தர் சிலையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தர உள்ளதாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும், கிராம மக்களுக்கும் அழைப்பிதழ் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அந்தவகையில், விகாரையை அழகுபடுத்துதல் மற்றும் வீதிகளை புனரமைத்தல் அதேபோல் வீதிகளில் இரு பக்கங்களையும் அழகுபடுத்தல் போன்ற வேலைகளில் கிராம மக்களும் முப்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதியின் வருகைக்காக வேண்டி அனைத்து வேளைகளும் பூரணப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி நாளை வர மாட்டார் என்பது தெரியவந்ததையடுத்து விகாராதிபதி மற்றும் பிரதேசமக்கள் மிகவும் ஆழ்ந்த ஆவேசத்தில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டின் ஜனாதிபதி இரண்டாவது தடவையாகவும் ஏமாற்றிய இவ்விடயம் பிரதேச சபையின் தலைவரையும் பிரதேச மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் நாட்டினுடைய ஜனாதிபதி மக்களை ஏமாற்றுவது விரும்பத்தகாத விடயம் எனவும் அப்பகுதிமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.