பொலிஸாரின் தடைகளை மீறி வரலாற்று நிலத்தில் திரண்ட தமிழர்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று நிலமான செம்மலையில் அமையப் பெற்றுள்ளது நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்.

இந்த நிலையில் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

எனினும் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த பக்தர்களை வழிபாட்டில் ஈடுபட விடாமல் தடுக்கும் வகையிலான செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆலய வழிபாட்டிற்கு வருகின்ற மக்களிடம் பெயர் விபரங்களை கேட்பதும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள். எந்த ஜிஎஸ் பிரிவை சேர்ந்தவர்கள் என கேள்வியெழுப்புவதுமாக உள்ளதாக இன்றைய தினம் நடைபெற்ற உற்சவத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறான தடைகள் இருந்த போதும் இன்றைய தினத்தில் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொங்கல் பொங்கி படைத்து பகிர்ந்துண்டு நீராவியடி பிள்ளையாரின் ஆசியை முழுமையாக பெற்றுள்ளனர் மக்கள்.

Latest Offers