யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கருத்தரங்கு

Report Print Suman Suman in சமூகம்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான விசேட கருத்தரங்கு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கு பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சுடன் கிளிநொச்சி வலயத்தின் கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகள் இணைந்து இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் இருநாள் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல் நாளான இன்று மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வாழ்வை முடித்து பல்கலைக்கழகம் செல்வோரை ஊக்குவிக்கும் வகையிலும், பல்கலைக்கழகத்தினால் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டம் முதல் முதலாக இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் பேராசிரியர் அலெக்ஸ் தேவரஞ்சன் மற்றும் பீடாதிபதி அற்புரராஜா ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இக்கருத்தரங்கில் 600 பாடசாலை மாணவர்களும், 300 பெற்றோரும் பங்குபற்றியுள்ளனர்.