திருகோணமலை மாவட்டத்தில் கடும் வறட்சி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய், புல்மோட்டை, குச்சவெளி, மூதூர் மற்றும் தம்பலாகாமம் ஆகிய பகுதிகளில் கடும் வெப்பத்துடன் கூடியதான வறட்சி நிலவுகிறது.

இதனால் மேய்ச்சல் தரைகள் காய்ந்துள்ளதுடன், கால்நடைகள் மேய்ச்சலை தேடி நீண்ட தூரம் செல்வதாகவும் கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.