மனிதாபிமானம் இல்லாத நாட்டில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இப்படியொரு நிலையா? கொந்தளிக்கும் தென்னிலங்கை மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலர் அழுத்தம் பிரயோகிப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

அழுத்தம் கொடுப்போருக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியின் சேவையை பாராட்டு தென்னிலங்கை மக்கள் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி உதவி செய்வது தொடர்பில் பலர் விமர்சிப்பதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு தென்னிலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ள சிங்களவர்கள், நீதிபதி இளஞ்செழியன் மீது பொறாமை கொள்ளும் சிலரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், பொறாமை என்பது அழித்துவிட முடியாத ஒரு வியாதி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு மனிதரை மிகவும் மதிப்பதாகவும் அவரது சேவைக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் தென்னிலங்கை சிங்கள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நீதிபதி என குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி செய்யும் சேவையானது மிகவும் விசேடமானதெனவும் அதனை விமர்சிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானம் தெரியாத மனிதர்கள் உள்ள நாட்டில் நீதிபதி செய்யும் இப்படியான மகத்துவமிக்க செயலுக்கு இன, மத பேதமின்றி மதிப்பளிக்க வேண்டும். அதனை விமர்சிக்காமல் மதிப்பளித்தாலே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடலாம். அதுவே உண்மையான நல்லிணக்கம் என அறியாத முட்டாள்கள் வாழும் நாட்டில் நீதிபதி போன்ற ஒருவருக்காக நாம் எப்போதும் இருப்போம் என பலர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers