முடக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம்! முன்னாள் போராளிக்கு அழைப்பாணை

Report Print Kumar in சமூகம்

அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளார் வடிவேல் சசிதரனிற்கு கல்முனை பிரதேச பொலிஸாரால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 08.07.2019ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சசிதரன் கருத்துதெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக நான் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் பௌத்த மயமாக்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றேன்.

இதற்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் பக்க பலமாக இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராகவும் நான் செயற்பட்டு வருகின்றேன். இந்த விசாரணைக்கான ஏற்பாடு இவர்களின் நடவடிக்கையாக கூட இருக்கலாம்.

2009ஆம் ஆண்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பின்பு இலங்கை இராணுவத்தினரால் எமது கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது, இராணுவத்தினரின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.