வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனத்திற்கு நேர்ந்த கதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - நிந்தவூர் பகுதியில் இராணுவ ஜீப் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இராணுவத்தினர் இன்று மதியம் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஜீப் வண்டியில் அதிகளவான இராணுவத்தினர் பயணித்திருந்த நிலையில் இவ்விபத்தின் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.