24 மணிநேரத்தில் இலங்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

Report Print Steephen Steephen in சமூகம்

முடிவடைந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் மது போதையில் வாகனம் ஓட்டிய 363 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஒரு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.