கொழும்பில் 81 கோடி ரூபாவுக்கு காணி கொள்வனவு செய்யும் நபர் யார்?

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் 81 கோடி ரூபா செலவில் காணி கொள்வனவு செய்யும் அமைச்சர் ஒருவர் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு 7 ஹோர்ட்டன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள காணியை குறித்த அமைச்சர் கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பெர்சஸ் காணி ஒரு கோடி70 இலட்சம் ரூபா என்ற கணக்கில் 48 பெர்சஸ் காணி இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

காணியை குறித்த அமைச்சர் கொள்வனவு செய்தாலும், காணி அனுமதி பத்திரத்தின் பெயர் அமைச்சரின் சகோதரியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் குறித்த காணிக்கு 5 கோடி ரூபா பணம் முற்பணமாக அதன் உரிமையாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

48 பெர்சஸ் காணிக்காக முழுமையாக 81 கோடி 60 லட்சம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers