துணிச்சலான முஸ்லிம் பெண்ணினால் பல தகவல்கள் அம்பலம்!

Report Print Vethu Vethu in சமூகம்

சிங்கள நபரை திருமணம் செய்தமையினால் பாரிய துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம் பெண் ஒருவர் பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் குறித்த பெண் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் இருந்து தொலைபேசி மற்றும் வேறு வழிகளிலும் முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஊடகங்களுக்கு முன்னால் பயமின்றி தான் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்தினார். இது பாதிக்கப்பட்ட ஏனைய பெண்களுக்கும் முன்னூதாரணமாக அமைந்துள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான பல தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் முக்கிய தகவல்களை வெளியிட்டமையினால் பல தரப்புகளில் குழப்பமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே குறித்த பெண் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பலர் முயற்சிப்பதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers