சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டை புனரமைக்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

சாய்ந்தமருது - வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன தலைமையிலான இராணுவ அணியினர் குறித்த வீட்டை இன்றைய தினம் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை புகைப்படம் எடுத்ததுடன், அதனை மீள அமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு பாராட்டி வரவேற்பு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சாய்ந்தமருது வீட்டுத்தொகுதியில் சஹ்ரானின் குடும்பத்தினர் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட போது, சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மற்றும் மகள் ருஸையா ஆகியோர் இருபது நிமிடங்கள் மலசல கூடத்தில் ஒழிந்திருந்தமையாலே உயிர்தப்பியதாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.