கடற்படையினர் கடத்தல், கொலைகளில் ஈடுபட்டமை கரன்னாகொடவிற்கு தெரியும்

Report Print Kamel Kamel in சமூகம்

கடற்படையின் சில உத்தியோகத்தர்கள் கடத்தல், கப்பம் கோரல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டமை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு தெரியும் என விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.

திருகோணமலை கன்சயிட் என்னும் கடற்படை முகாமில் கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சித்திரைவதை கூடமொன்று இயங்கியதாகவும், படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இது பற்றி வசந்த கரன்னகொட நிச்சமயாக அறிந்து வைத்திருந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தகவல்களை அறிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்த காலப் பகுதியில் கடற்படை முகாமில் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது கரன்னாகொடவிற்கு தெரியும் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடற்படை புலனாய்வுப் பிரிவு கப்டன் ஆனந்த குருகே உள்ளிட்ட சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த 3ஆம் திகதி கொழும்பு கோட்டே நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் சமர்த்த அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடற்படை உத்தியோகத்தர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கைதிகள் கொல்லப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.