நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் குவிந்த தமிழ் அரசியல் தலைவர்கள்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் தமிழா்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் வகையில் 108 பானையில் பொங்கல் பொங்கும் தமிழர் திருவிழா நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது .

இந்த திருவிழா நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

வடக்கு கிழக்கின் மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பொதுமக்கள், இளைஞா்கள் கலந்து கொண்டிருந்ததுடன், அரசியல் தலைவா்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி .சிவமோகன், சி.ஸ்ரீதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் ஏனைய பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர் .