எதிர்ப்புகளுக்கு மத்தியில் இசை நிகழ்வு! ஆயுதப் படையினர் பாதுகாப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா படையினரின் அனுசரணையில் இசை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நகரசபை மைதானத்தில் பெருமளவு படையினரின் பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது.

நகரசபையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்புடன் இலங்கை இராணுவத்தின் 56 படைப்பிரிவின் அனுசரணையில் இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த இசை நிகழ்விற்கு எதிராக இன்று நகரசபை மைதானத்திற்கு அருகே கடந்த 868 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தாய்மார்களினால் படையினரின் இசை நிகழ்விற்கு எதிர்புத் தெரிவிக்கப்பட்டு இன்று முற்பகல் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலும் படையினர் தமது இசை நிகழ்வுகளை நடாத்துவதற்கான துரித நடவடிக்கைகளை ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸ் பாதுகாப்புடன் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers