இராணுவ வாகனம் விபத்து - 10 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நிந்தவூர் - அல்லிமூலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தி 10 இராணுவீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் வீதியின் குறுக்கே பாய்ந்த ஆடொன்றினைபாதுகாக்க முற்படுகையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 10 இராணுவ வீரர்களும் காயமடைந்த நிலையில் பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தினை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களின் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு படங்கள் இராணுவ வீரர்களினால் அழிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில ஊடகவியலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் இராணுவ அதிகாரிகளினால் விடுக்கபட்டதாகவும் அவர் கூறினார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers