ஜனாதிபதியை சந்திக்க சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சந்திப்பொன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நாடுளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இடம்பெறக்கூடாது. சட்ட வல்லுநர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நியமிக்கப்படவேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுன் கலந்துரையாட வேண்டும்.

1978ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு இது குறித்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை ஜனாதிபதி மீறக்கூடாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers