ஞானசார தேரர் தலைமையில் கண்டியில் பௌத்த மாநாடு

Report Print Malar in சமூகம்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கண்டியில் பௌத்த மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.

கண்டியில் அமைந்துள்ள போகம்பரை திடலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பொது பல சேனா அமைப்பினால் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

பௌத்தமாநாடு குறித்து கலகொடஅத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,

நாடு தற்போது மிகவும் அரசியல் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.

அடிப்படைவாதத்திற்கு எதிரான ஒரேயொரு மாற்றுவழியானது தேரர்களின் போதனைகளாகும் என மக்கள் வெளிப்படையாக கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகள், அடிப்படைவாதம் என்பனவற்றைத் தோற்கடிப்பதற்காக அனைத்து இன மக்களையும் ஒரு ஒழுங்குப் பத்திரத்திற்காக ஒன்றிணைப்பதற்கு இன்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Latest Offers