பாலத்தின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்து : சிவஞானம் சிறீதரன்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, அக்கராயன் முறிகண்டி வீதியில் ஆயிரம் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளை நேற்று மாலை சந்தித்து இதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், பாலத்தின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி, அக்கராயன் திருமுறிகண்டி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலமையில் காணப்பட்ட பாலத்தினை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆயிரம் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இப்பாலம் தெரிவு செய்யப்பட்டு பாலத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி பாலத்தின் பணிகள் துரித கதியில் முன்னெடுக்குமாறும் இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் போக்குவரத்துவரத்திற்காக மாற்று பாதை அமைக்கப்படாது அக்கராயன் குடியிருப்பு வீதி மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுவதனால் வீதி சேதமடைவதாகவும் பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாற்றுவழிப்பாதையான பயன்படுத்தும் வீதியினை புனரமைத்து வழங்குமாறு மக்கள் கோரியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் மற்றும் கட்சி செயற்பட்டாளர் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers