கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக அப்பகுதி மக்கள் இவ்வாறு பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அப்பகுதியில் குடிநீர் விநியோகம் குழாய் மூலம் வழங்கப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட சில பகுதிகளிற்கு வழங்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களிற்கு படையினர் குடிநீரை விநியோகித்து வருகின்றனர்.

அவ்வாறு படையினர் குடிநீர் வினியோகித்துவரும் பகுதியில் உள்ள நீர் குழாய்கள் சேதமடைந்து உள்ளமையை காணமுடியும் அதேவேளை, இப்பகுதி மக்கள் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், தமது நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Latest Offers