இலங்கையில் யாசகம் பெறும் பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! சொந்தமாக இத்தனை வீடுகளா?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.

யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.

Latest Offers