நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள்: அச்சத்தில் உறவினர்கள்

Report Print Yathu in சமூகம்

பாம்பன் வடக்கு கடற்கறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காமையினால் மீனவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 60இற்கும் குறைவான நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துவிட்டு வழக்கம் போல் மறுநாள் காலை கறைத் திரும்ப வேண்டிய நிலையில் இன்று வரை நான்கு மீனவர்கள் கறை திரும்பவில்லை.

ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் ஆகிய நான்கு மீனவர்களே இவ்வாறு கறை திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கறை திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக சக மீனவர்கள் தேடி வருகின்றனர். ஆனால், மாயமான மீனவர்கள் நிலை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மூன்று நாட்களாக கறை திரும்பாத மீனவர்களை பத்திரமாக உயிரோடு மீட்டுத் தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க அமைப்புகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலில் காணமல் போன சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers