உள்ளூர் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய உள்ளூர் துப்பாக்கியொன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - பக்மீகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கோமரங்கடவல பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. ஜி. ஜி. சில்வாவின் அறிவுறுத்தலின்படி குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ரணவீரவின் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலையில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers