மது போதையில் 2 டிப்பர் வாகனங்களுக்கு கல்வீச்சு : சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் இரண்டு டிப்பர் வாகனங்களுக்கு கல்வீசிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திரியாய் - கிரிஹடுசாய விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக செங்கல் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தில் வீசப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மது போதையில் கல் வீச்சு நடாத்தியவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் கோமரங்கடவல - கிவுளக்கட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு டிப்பர் வாகனங்களுக்கும் 80000 ஆயிரம் ரூபாய் மற்றும் 4000 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கல்வீச்சு நடாத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers