பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூடு - இராணுவ வீரர் எந்த தவறும் செய்யவில்லை என்கிறது இராணுவம்

Report Print Steephen Steephen in சமூகம்

காலியில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இராணுவ வீரர் தவறு எதனையும் செய்யவில்லை என்பது கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தெரியவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் மட்டுமல்ல வதந்திகளும் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவப் பொலிஸார் சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், இராணுவ பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சந்தேக நபரான இராணுவ வீரர், அவசரகாலச் சட்டத்தின்க கீழ் பூசா 581 இராணுவப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேவைப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அவரை பொலிஸாரிடமோ அல்லது நீதிமன்றத்திடமோ ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Latest Offers