அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் கடற் தொழிலால் மீனவர்கள் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் கடற் தொழிலால் தமது தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மீனவர்கள் மேலும் கூறுகையில்,

கடற்தொழிலையே பிரதான வாழ்வாதார தொழிலாக கொண்டு மக்கள் வாழும் இந்த பிரதேசத்தில் தமது தொழில் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. இதனால் அன்றாட உணவிற்கே அல்லல்பட வேண்டிய நிலை காணப்படுகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சுருக்குவலை பயன்படுத்துதல், வெளிச்சம் பாவித்தல், அட்டைத்தொழில் போன்ற நிபந்தனைகளை மீறிய கடற் தொழிலால் மீன்வளம் இல்லாது போயுள்ளது.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் கடலில் தொழிலுக்கு சென்று கரை திரும்பும் மீனவர்களில் அதிகளவானோர் வெறும் கையுடனேயே கரை திரும்புகின்றனர். இந்த நிலை அண்மை நாட்களாக தொடர்ந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers