வெளிநாட்டில் இருந்து வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு காணப்பட்டுள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹசலக பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஸ்ரீயானி தயாரத்ன என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை வயல் வெளியில் வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய மனைவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

தாயகம் திரும்பிய பெண், வீட்டிற்கு செல்லாமல் தனது தாயாரின் கம்பளை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர் தனது தாயாருடன் நேற்று முன்தினம் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று காலை தாயாரை கண்டி பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் கணவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சரணடைந்த கணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.