4 பயங்கரவாத அமைப்புக்களுடன் உலமா சபைக் கு நேரடித் தொடர்பு! ஞானசார தேரர்

Report Print Rakesh in சமூகம்

இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளதால் அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாம் என தான் கூறிவைக்க விரும்புவதாகவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

"சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கின்றார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்து கொண்டோம்.

கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றிப் பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும். இன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி.

மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொரு பக்கம் பலம் வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வு சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கை என்று பல பிரச்சினைகள்.

நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும்.

சுபி முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் - தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகின்றது.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் நேரடித் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

4 அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குர்ஆன் உள்ளது. 1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர்ஆன் உள்ளது. அந்த குர்ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அரசுக்குள்ளே அரசு, சட்டத்திற்குள்ளே சட்டம், நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம் என வெவ்வேறான சட்டங்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர்.

தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்ச வாக்குகளுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers