நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! நவீனமயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

Report Print Vethu Vethu in சமூகம்

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை கையளித்த அனைத்து விண்ணப்பதாரிகளும் இன்று முதல் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களத்தின்; தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்தார்.

இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோக செயற்பாடுகளை ஓகஸ்ட் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.