யாழ்.நோக்கிச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Theesan in சமூகம்
1306Shares

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

வவுனியா - ஈரப்பெரியகுளம், கல்குணாமடுப் பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


you may like this video....