பெண், மகள், மகன் மீது அசிட் தாக்குதல் - சந்தேக நபரும் தற்கொலை - இலங்கையில் நடந்த பெரும் சோகம்

Report Print Vethu Vethu in சமூகம்

கேகாலையில் நபர் ஒருவரினால் பெண், மகள் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கொடபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் அவ்வாறு அசிட் தாக்குதலின் பின்னர் குறித்த நபரும் அதனை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அசிட் அருந்திய நபர் மற்றும் தாக்குதலுக்குள்ளான பெண், பிள்ளைகள் இருவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அசிட் அருந்திய நபர் உயிரிழந்துள்ளார்.

கோடியாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான கனேபொட விதானலாகே விஜித ருவண் விக்ரமபால என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் பெண்ணுக்கு இடையில் நீண்ட காலமாக இரகசியமான தொடர்பு காணப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டிற்கமைய இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இதற்கு முன்னரும் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.