உகந்தை ஆலயம் சென்று வீடு திரும்பிய தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - காரைதீவு, முருகன் கோயில் வீதியில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உகந்தை மலை ஆலய வழிபாட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பிய போதே, வீட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டினுள் பிரவேசித்துள்ள திருடர்கள் ஜன்னல் ஒன்றின் ஊடாக உட்பிரவேசித்து அறைகளில் சல்லடை போட்டு தேடியுள்ளதுடன், 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகைகளையும் 40,000 ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளனர்.

இதேவேளை திருடர்கள் தலைமறைவாகியுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பெருங்குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் வசிக்கும் தம்பதியினர் ஆசிரியராகவும், பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.