வடமாகாண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும்வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று முற்பகல் யாழ். நாவலர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட ஆளுநர், அதை நோக்காக கொண்டு முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


you may like this video....

Latest Offers