குடும்பத்தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - கல்முனை, சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டுமுற்றத்திலுள்ள மரத்திலே நேற்றிரவு குறித்தநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் 53 வயதுடையவருமான கந்தையா யோகலிங்கம் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது உடற்கூற்று ஆய்வுக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest Offers