ஞான‌சார‌ தேர‌ரை வன்மையாக கண்டிக்கும் உல‌மாக் க‌ட்சி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா ச‌பைத் த‌லைவ‌ர் ரிஸ்வி முப்தியின் பெய‌ரை கூறி ஞான‌சார‌ தேர‌ர் அவ‌ரை விம‌ர்சித்த‌மைக்காக‌ உல‌மா க‌ட்சி த‌ன‌து க‌ண்ட‌ன‌த்தை தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவ‌து,

அண்மையில் க‌ண்டியில் ந‌டைபெற்ற‌ பொதுப‌ல‌ சேனாவின் கூட்ட‌த்தின் போது ஞான‌சார‌ தேர‌ர் உரையாற்றுகையில் அவ‌ர‌து வ‌ழ‌மையான‌ பாணியை மாற்றி மிக‌வும் நிதான‌மாக‌ பேசிய‌மை ந‌ல்ல‌ விட‌ய‌மாகும்.

ஆனாலும், இல‌ங்கை உல‌மா ச‌பையின் த‌லைவ‌ர் ரிஸ்வி முப்தியின் பெய‌ரைக்கூறி அவ‌ரை மோச‌மாக‌ விம‌ர்சித்த‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தும், இது பௌத்த‌ ஹாம‌துருமாருக்கு அவ‌சியம‌ற்ற‌துமாகும்.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் நாம் விரும்புகின்ற‌ப‌டி உல‌மாக்க‌ள் இருக்க‌ வேண்டும் இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற‌ வேண்டும் என‌ கூறிய‌து அடிப்ப‌டைவாத‌மும் தீவிர‌வாத‌முமாகும்.

எம்மை பொறுத்த‌வ‌ரை உல‌மா ச‌பைத்த‌லைவ‌ர் மீது சில‌ விம‌ர்ச‌ன‌ங்கள் இருக்கின்ற‌ன‌.

அவ‌ற்றில் நாம் மௌன‌மாக‌ இருக்காம‌ல் அவ‌ற்றை ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டி வ‌ந்துள்ளோம்.

அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி ப‌ற்றிய‌ விட‌ய‌ங்க‌ளை இந்த‌ நாட்டு உல‌மாக்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள்.

அவை ப‌ற்றி பௌத்த‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ள் த‌லையிடுவ‌தும், விம‌ர்சிப்ப‌தும் ச‌மூக‌ங்க‌ளுக்கிடையில் அநாவ‌சிய‌ ம‌ன‌வ‌ருத்த‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துவ‌தாகும்.

அது ம‌ட்டும‌ல்லாது ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா ச‌பை த‌லைவ‌ருக்கு தீவிர‌வாத‌த்துட‌ன் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை என்ப‌தை முழு நாடும் அறியும்.

அவ்வாறு இருந்தால் அத‌னை பொலிஸாரிட‌ம் சொல்ல‌ முடியுமே த‌விர‌ ஒரு ம‌த‌த் த‌லைவ‌ரை இன்னொரு ம‌த‌த்த‌லைவ‌ர் ப‌கிர‌ங்க‌ மேடையில் விம‌ர்சிப்ப‌து அழ‌கான‌ செய‌ல் அல்ல‌.

ஆக‌வே, ஞான‌சார‌ தேர‌ரின் உல‌மா ச‌பை த‌லைவ‌ர் ப‌ற்றிய‌ இத்த‌கைய‌ பேச்சுக்க‌ளை நாம் வ‌ன்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் அவ‌ற்றை அவ‌ர் வாப‌ஸ் வாங்கி இன‌ங்க‌ளுக்கிடையில் ந‌ல்லுற‌வை ஏற்ப‌டுத்த‌ முன் வர‌ வேண்டும் என‌ நாம் பொதுப‌ல‌ சேனாவை கேட்டுக்கொள்வ‌துட‌ன் இந்த‌ பேச்சுக்கு வ‌ழி வ‌குத்த‌ உல‌மா ச‌பை த‌லைவ‌ர் ரிஸ்வி முப்தியும் த‌ன‌து சில‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் திருத்திக்கொண்டு த‌லைவ‌ர், நிர்வாக‌ தெரிவு என்ப‌து ப‌ழைய‌ யாப்பின் ப‌டியும் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி, 40 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌ அனைத்து உல‌மா ச‌பை மூத்த‌ அங்க‌த்த‌வ‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு தெரிவு செய்யும் முறையை கைக்கொள்ள‌ வேண்டும் என்றும் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

வாக்க‌ளிப்பின் ப‌டியும் ந‌ட‌க்க‌ வேண்டும் என்ப‌தை ப‌ல‌ வ‌ருட‌மாக‌ சொல்லி வ‌ருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers